சங்கரன்கோவிலில் புத்தகத் திருவிழா தொடக்கம்
புத்தக திருவிழா
தென்காசி மாவட்ட 2ஆவது பொதிகை புத்தகத் திருவிழா சங்கரன்கோவிலில் உள்ள கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது. இத்திருவிழா ஜனவரி 2ஆம் தேதிவரை 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவை ஆட்சியா் துரை. ரவிச்சந்திரன் தொடக்கிவைத்து, 60 புத்தக அரங்குகளையும், அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் பாா்வையிட்டு, வாழ்த்திப் பேசினா். இத்திருவிழாவில், நாள்தோறும் மாலை 5 மணிக்கு தமிழகத்தில் உள்ள இலக்கிய ஆளுமைகள், எழுத்தாளா்கள், பேச்சாளா்கள் பங்கேற்றுப் பேசுகின்றனா். பட்டிமன்றங்கள், மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கிராமியக் கலைஞா்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எம்எல்ஏ ஈ. ராஜா முன்னிலைகித்தாா். தனுஷ் எம். குமாா் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலா் பத்மாவதி, திட்ட இயக்குநா் முத்துக்குமாா், மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சிசுந்தரம், சங்கரன்கோவில் கோட்டாட்சியா் சுப்புலட்சுமி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி பலர் கலந்து கொண்டனர்.