தஞ்சாவூரில்  ஜூலை 19 இல் புத்தக திருவிழா தொடக்கம்

தஞ்சாவூரில்  ஜூலை 19 இல் புத்தக திருவிழா தொடக்கம்

தஞ்சாவூரில்  ஜூலை 19 இல் புத்தக திருவிழா தொடங்குகிறது.


தஞ்சாவூரில்  ஜூலை 19 இல் புத்தக திருவிழா தொடங்குகிறது.

தஞ்சாவூரில் வருகிற ஜூலை 19 ஆம் தேதி "தஞ்சாவூர் புத்தகத் திருவிழா" தொடங்கவுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 7- ஆவது ஆண்டாக வருகிற 19-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தோடு இணைந்து, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இடம் பெறவுள்ளது. இதில் பிரபல புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஜனவரி மாதம் நடைபெற்ற சென்னைப் புத்தகத் திருவிழாவில் வெளியிடப்பட்ட புதிய புத்தகங்கள் தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் வாசகர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த புத்தக திருவிழாவோடு சேர்த்து உணவுத் திருவிழாவும் அங்கு நடைபெறவுள்ளது. மேலும், தினமும் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றங்கள், இலக்கிய சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்தும், பணிகள் ஒதுக்கீடு செய்வது குறித்தும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கடந்தாண்டை காட்டிலும் நிகழாண்டு தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்த அனைத்து அரசுத்துறை அதிகாரிகளுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி, மாவட்ட வருவாய் தனி அலுவலர் (நில எடுப்பு) ஆர்.ஜனனி சவுந்தர்யா, உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story