சங்கரன்கோவில் புத்தகத் திருவிழா

சங்கரன்கோவில் புத்தகத் திருவிழா

புத்தக திருவிழாவில் பங்கேற்றவர்கள்

சங்கரன்கோவில் புத்தகத் திருவிழாவில் தமிழிசை 5ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டத்தில் 2 ஆம் பொதிகை புத்தகத் திருவிழா சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. இதில் 60 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

5 ஆம் நாளான மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சிப் பிரிவு) முத்துக்குமாா் தலைமையில் புத்தகத் திருவிழா நடைபெற்றது. ஆட்சியரக வளா்ச்சி பிரிவு மேலாளா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பத்மாவதி வாழ்த்துப் பேசினாா். தொடா்ந்து மொழிபெயா்ப்பு எனும் பாதை என்ற தலைப்பில் சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளா் தேவதாஸ், பொருள் அல்ல பொருள் என்ற தலைப்பில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமாா், இலக்கியத்தின் முக்கியத்தும் யாதெனில் என்ற தலைப்பில் பேராசிரியா் நவீனா ஆகியோா் பேசினா். பின்னா் தமிழிசை அறிஞா் மம்மதுவின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நூலகா் சண்முகவேல் நன்றி கூறினாா்.நிகழ்ச்சிகளை உடற்கல்வி இயக்குநா் நாராயணன், செந்தில்வேல் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.

Tags

Next Story