உதகையில் தொடங்கியது புத்தக திருவிழா
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் சிறப்பு புத்தக திருவிழா தொடங்கியது. இன்று முதல் 29ம் தேதி வரை 10நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டார். ஒவ்வொரு அரங்குகளிலும் சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள், குழந்தைகளின் அறிவுத்திறனை வெளிக்கொண்டு வரும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக சிறுகதைகள், தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, மருத்துவம், இலக்கியம், கல்வி என பல்வேறு தலைப்புகளில் வெளியிடபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் சிறப்பு பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்கள் இலக்கிய நிகழ்வுகள் பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.