ஆரணி பொது நூலகத்தில் புத்தக வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பொது நூலகத்தில் இன்று புரெபஷ்னல் இங்கிலீஷ் -1 பொறியியல் மாணவர்களுக்கான அண்ணா பல்கலைக்கழக ஆங்கில பாடநூல் வெளியீடு நடைபெற்றது. கலவை ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரா. மணிகண்டன் அவர்கள் இந்நூலை எழுதியுள்ளார். முன்னதாக, நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வந்தவர்களை நூலகர் சுகுந் வரவேற்றார்.
ஶ்ரீ பாலாஜி சொங்கலிங்கம் பொறியியல் கல்லூரி இணைப்பேராசிரியர், முனைவர் வி. கந்தசாமி நூலை வெளியிட, முனைவர் அ.அமுல்ராஜ், உதவிப் பேராசிரியர் எஸ். சிவக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் பேராசிரியர்கள் வி. கந்தசாமி, எஸ்.சிவக்குமார், முனைவர் அ.அமுல்ராஜ், உதவி பேராசிரியர் . தேவராஜன், திரு.மனோஜ், ஆசிரியர் சார்லஸ், திரு.தினேஷ் எழுத்தாளர் இளைய தமிழன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நூலாசிரியர் இரா.மணிகண்டன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
