பொன்னமராவதியில் நூல் வெளியீட்டு விழா!

பொன்னமராவதியில் நூல் வெளியீட்டு விழா!

நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

பொன்னமராவதியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'பெண்ணெனும் பேராளுமை' எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ச.ம. மரியபுஷ்பம் எழுதிய இந்த நூலின் வெளியீட்டு விழாவுக்கு முன்னாள் எம்எல்ஏவும் திமுக கலை இலக்கியப் பிரிவு மாநில துணைச் செயலருமான இராசு. கவிதைப்பித்தன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

அருள்தந்தை இலா. பிரான்சிஸ் சேவியர் நூல் உரையாற்றினார். சிவகங்கை சிஐசி அறிமுக நூலை மாநிலத் தலைவி 2. லீமா ரோஸ் வெளியிட,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் என். பக்ரூதீன் பெற்றுக் கொண்டார்.

முத்தமிழ்ப் பாசறை அறங்காவலர் குழு செயலர் நெ. ராமச்சந்திரன், மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வே.அ. தொட்டியம்பட்டி பழனியப்பன், ஊராட்சித் தலைவர் கீதா சோலையப்பன், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் எஸ்பி. ராஜேந்திரன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் ராம.சேதுபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

நூலாசிரியர் ச.ம.மரியபுஷ்பம் ஏற்புரையாற்றினார்.விழாவில் இறைபணியில் (கன்னியாஸ்திரி) ஈடுபட்டு 50 ஆண்டை கடந்த ச.ம.மரியபுஷ்பம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். முன்னதாக, பள்ளியின் துணை முதல்வர் இரா. பிரின்ஸ் வரவேற்றார். ஆசிரியர் பாலமுரளி நன்றி கூறினார்.

Tags

Next Story