குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா

குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீடு.
குமரி மாவட்டம், குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் குளச்சல் வரதராஜன் எழுதிய சிலம்பு களஞ்சியம் என்ற நூல் வெளியீட்டு விழா வெட்டு வெந்நியில் நடைபெற்றது. குமரி முத்தமிழ் மன்ற தலைவர் முளங்குழி பா. லாசர் தலைமை வகித்தார். சிலம்பை டென்னிசன் வரவேற்றார். செயலாளர் சஜீவ் குமரி முத்தமிழ் மன்ற செயலாக்கம் குறித்து பேசினார். திருச்சி நீதிமன்ற நீதிபதி ஜெய்சங்கர் நூலை வெளியிட, தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிந்துகுமார் நூலை பெற்றுக் கொண்டார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாபு நூலை திறனாய்வு செய்தார். அவைத் தலைவர் குமரேசதாஸ் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் குமரி மாவட்ட ரெட் கிராஸ் சங்கத்தில் வெற்றி பெற்ற பேராசிரியர் சஜீவ், தமிழ் பணியில் சாதித்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பாபு, ஜெயக்குமார் ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்வில் பேராசிரியர் சுப்பிரமணியன், சங்கரி, பொருளாளர் தமிழ்மாறன் ஆகியோர் பேசினர்.

Tags

Next Story