திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் குறித்த புத்தகம் வெளியீடு

சங்ககிரியில் முன்னாள் திரைப்பட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் வாழ்க்கை வரலாறு குறித்த புகழூரின் பொன் மனம் புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி முத்தமிழ் சங்கம், கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில் முன்னாள் திரைப்பட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் பிறந்தநாள்விழா மற்றும் அவரது வாழ்க்கை வரலாறு குறித்த"புகழூரின் பொன் மனம்" என்ற தலைப்பில் புத்தகம் வெளியீட்டு விழா அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன். நினைவு நூலக வளாகத்தில் சங்ககிரி முத்தமிழ்சங்கத்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கொங்கணாபுரம் தமிழ்ச்சங்க செயலாளர் மணிசங்கர் வரவேற்றார். முன்னாள் திரைப்பட இயக்குநர் ஏ.பி. நாகராஜனின் வாழ்க்கை வரலாறு குறித்து கொங்கணாபுரம் தமிழ்ச்சங்கத்தலைவரும், கவிஞருமான ஜெகநாதன் எழுதிய "புகழூரின் பொன் மனம்" என்ற புத்தகத்தை சேலம் ஸ்ரீ சண்முகா மருத்துவமனை மருத்துவர் பன்னீர்செல்வம் வெளியிட சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கந்தசாமி, ஓமலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் தமிழரசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அப்போது வழக்குரைஞர் சேகர், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, சீனிவாசன்,ரோட்டரி சங்கத்தலைவர் செந்தில்குமார், ரோட்டரி சங்க மாவட்ட நிர்வாகி வெங்கடேஸ்வரகுப்தா,ஓம்ராம் அறக்கட்டளை சுந்தரவடிவேல்,தண்ணீர் தண்ணீர் அமைப்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன்,அமுதசுடர் அறக்கட்டளைத் தலைவர் சத்தியபிரகாஷ், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story