பல்வேறு திட்டபணிகளுக்கான பூமி பூஜை

பல்வேறு திட்டபணிகளுக்கான பூமி பூஜை

பூமி பூஜை 

பரமத்திவேலூர் பகுதியில் பல்வேறு திட்டபணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

பரமத்திவேலூர் பேரூராட்சிக்குட்பட்ட ஓவியம்பாளையம் பகுதியில் ரூ.24 லட்சம் செலவில் சமுதாய கூடம், மற்றும் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி‌ கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேகர் தலைமை வகித்து‌ சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் செலவில் சமுதாயக் கூடமும் மற்றும் ஓவியம் பாளையம் 4 - வது வார்டில் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகியவை கட்டுவதற்காக பூமி பூஜை விழாவை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தமிழ்மணி, பரமத்தி ஒன்றிய கழகச் செயலாளர் வெற்றிவேல், பரமத்தி நகர செயலாளர் சுகுமார், பரமத்தி பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணியன், மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story