கலவை அருகே குடியிருப்பு கட்ட பூமி பூஜை

கலவை அருகே குடியிருப்பு கட்ட பூமி பூஜை

கலவை அருகே குடியிருப்பு கட்ட பூமி பூஜை


அத்தியானம் கிராமத்தில் இருளர் இன குடியிருப்பு மக்களுக்கு சுமார் ரூபாய் ₹ 52.44 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை போட்டு எம்எல்ஏ துவக்கி வைத்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கலவை அடுத்த அத்தியானம் கிராமத்தில் இருளர் இன மக்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக்கிடம், குடியிருப்பு கட்டிடம் கட்ட கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு 12 குடியிருப்புகளுக்கு சுமார் ரூபாய் ₹ 52.44 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு தலைவர் அசோக், தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமிரி கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், வரவேற்றார்.

இதில், சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், கலந்துகொண்டு இருளர் இன மக்களுக்கு குடியிருப்புக் கட்டிடம் கட்ட அரசாணை வழங்கி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர்கள் குமாரி கலைமணி, பாஸ்கரன், கோகுல்ராஜ், திமுக ஒன்றிய அவை தலைவர் பாலி சுப்ரமணி, சேஸ்யா, திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரூர் குமார், கல்விக்குழு நிர்வாகி ஹரி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்துக்கொணடனர்..

Tags

Next Story