சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் திணறும் பூமார்க்கெட் ரோடு
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்
திண்டுக்கல் பூமார்க்கெட்டில் பொருட்களை வாங்க வரும் மக்கள்,வியாபாரிகள்,விவசாயிகள் தங்களது டூவீலர்களை பூ மார்க்கெட்டை சுற்றி சுற்றி நிறுத்துகின்றனர். இதனால் இவ்வழியில் பஸ் ஸ்டாண்ட்,ஏ.எம்.சி.,ரோடு,மாநகராட்சி செல்லும் ரோட்டிற்கு செல்லும் மக்கள்,வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். போலீசார் அடிக்கடி நடவடிக்கை எடுத்தபோதிலும் இந்நிலை தொடர்கிறது. இதற்கு தீர்வாக பூ மார்க்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாநகராட்சி டூவீலர் பார்க்கிங் ஏற்படுத்தி தர வேண்டும். போலீசாரும் டூவீலர்களை பூ மார்க்கெட் அருகே நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு ஆய்வாளர் உலகநாதனிடம் கேட்டபோது, தீபாவளி நேரம் என்பதால் அதிக டூவீலர்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற நாட்களிலும் சிலர்தான் டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.என்றார்.