பூதலூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் - சிபிஎம் கோரிக்கை 

பூதலூரை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் -  சிபிஎம் கோரிக்கை 
கிராம சபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது
பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பூதலூர் பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க கோரி சிபிஎம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
குடியரசு தின விழா சிறப்பு கிராம சபைக் கூட்டம், தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள வெண்டையம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஊராட்சி மன்றத் தலைவரிடம் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது, பூதலூர் பகுதியில், நடப்பாண்டு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். ஊராட்சிக்கு நிரந்தர செயலாளரை பணியில் அமர்த்தவும், பூதலூர் தாலுகாவின் தலைநகரில், துணைக் கருவூலம், நீதிமன்றம், பாரத ஸ்டேட் வங்கி கிளை அமைக்க வேண்டும். பூதலூர் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பணியாளரை பணியமர்த்த வேண்டும். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இதை தீர்மானமாக நிறைவேற்றி, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்" என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story