செங்கத்தில் ஆழ்துளை கிணறு மின்விசை தொட்டி - எம்எல்ஏ துவக்கி வைப்பு

செங்கத்தில் ஆழ்துளை கிணறு மின்விசை தொட்டி  -  எம்எல்ஏ துவக்கி வைப்பு
துவக்க விழா 

செங்கம் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி சிவன் கோயில் தெரு 11வது வார்டில் ரூபாய் ஆறு லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய ஆழ்துளை கிணறு மின்விசை மினி டேங்க் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவர் தலைமை சாதிக்பாஷா தாங்கினார். கோயில் அறங்காவலர் குழுத் தலைவரும் திமுக நகர செயலாளருமான அன்பழகன் முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி உறுப்பினர் சத்யா முல்லை வரவேற்றுப் பேசினார். செங்கம் தொகுதி எம். எல்.ஏ மு.பெ.கிரி ஆழ்துளை கிணறு மின் விசை மினி டேங்க்கை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர்கள் கோலாப்பாடி செந்தில், அந்தனூர் மனோகரன் ,பிஞ்சூர் ஏழுமலை, மாவட்டஅணி துணை அமைப்பாளர்கள் கட்டமடுவு சேட்டு ,வில்சன், ரஜினிகாந்த், ஸ்ரீதரன் ,நகர அவைத்தலைவர் முத்துகிருஷ்ணன், பேரூராட்சி உறுப்பினர்கள் ரேவதி முருகமணி, அமுதா தட்சிணாமூர்த்தி, சந்தியா ராபின்சன், அஞ்சலை பாலு ,இந்திரா நாகராஜ் ,மீனா சம்பத் ,முரளிதரன் ,முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் அப்துல் வாஹித் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story