பிறந்த குழந்தை மரணம் - ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

பிறந்த குழந்தை மரணம் - ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

வந்தவாசி அருகே தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஓபிஆர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 27) இவரது மனைவி பவானி (வயது 23). பிரசவ கால சிகிச்சைக்காக முருகன் தனது மனைவி பவானியை தெள்ளாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளார். மருத்துவர் பணிநேரத்தில் இல்லாததால் செவிலியரே பிரசவம் பார்த்ததில் இவருக்கு நேற்று ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சி இவர்களுக்கு ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. அந்த ஒரு நாள் குழந்தை திடீரென இறந்ததால், ஆத்திரமுற்ற இவர்களின் நண்பர்களும்,உறவினர்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது.எனவே, இரவுப் பணிக்கு வராத மருத்துவர், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுகாதார நிலையத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செய்யாறு சுகாதார பணிகள் இணை இயக்குநர் செந்தில்குமார், போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story