வாங்கிய கடன் ரூ.1 கோடி - அடமானம் வைத்தது ரூ.10 கோடிக்கு : விவசாயி புகார்
காவல் நிலையம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோட்ராலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (54).. விவசாயியான இவர், படித்து முடித்த இரண்டு மகன்களுக்காக தொழில் தொடங்க தனது வீடு, நிலம் அமைந்துள்ள 1.02 ஏக்கர்கள் நிலத்தை காண்பித்து பல வங்கிகளில் கடன் பெற முயன்றும் அதிக கடன் கொடுக்க முன்வராததால், கோயம்புத்தூரை சேர்ந்த இராமச்சந்திரன், ஆறுசாமி, மணிகண்டன் ஆகிய மூன்று இடைத்தரகர்கள் மூலம் கோயம்புத்தூரை சேர்ந்த (MARCOPOLO INDUSTRIES THEPPAKULATHUPARAI,THIRUMALAYAMPALAYAM, KUMITTIPATHI POST) மார்க்கோபோலோ நிறுவனத்தின் பெயரில் விற்பனையானதாக பத்திரம் செய்தால் 1.23 கோடி ரூபாய் பணம் ஒரு ரூபாய் வட்டிக்கு தருவதாக கூறியதை தொடர்ந்து கோவிந்தராஜ், தனக்கு சொந்தமான ஒரே நிலம் வீடு,விளைநிலமான 1.02 ஏக்கர் நிலத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் விற்பனை பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
பத்திரப்பதிவின்போது 70 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், மீதி 53 லட்சம் ரூபாய்க்கு ஆவணத்தில் காசோலை காண்பித்து கோவிந்தராஜ்க்கு வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.. கோவிந்தராஜ் 2 மாதங்கள் ரமேசிடம், கடன் தருவதாக கூறிய மீதி பணத்தை கேட்டுவந்துள்ளார். சந்தேகமடைந்த கோவிந்தராஜ் நிலத்தின் EC யை பார்த்தபோது, அவரின் நிலத்தை சென்னையில் உள்ள UNITY SMALL FINANCE வங்கி கிளையில் அடமானம் வைத்து 10 கோடி ரூபாய் பணம் பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுக்குறித்து கோவிந்தராஜ் கோயம்புத்தூர் சென்று நியாயம் கேட்டப்போது நாங்கள் கொடுத்த 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் ஆவணங்களை திருப்பி எழுதி தருவதாக கூறியிருந்ததாகவும் இடைதரகர் இராமச்சந்திரன் கோவை அடுத்த செல்வபுரம் பகுதியில் குடும்பத்தோடு 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டதால் தற்போது வங்கியில் 10கோடி ரூபாய் பணம் பெற்றது இராமச்சந்திரன் தான், என்று ரமேஷ் மற்றும் UNITY SMALL FINANCIAL வங்கி கிளை மேலாளர் தங்களை ஏமாற்றி மோசடி செய்திருப்பதாக கூறும் கோவிந்தராஜ் தனது பரம்பரை சொத்தை கடனுக்காக பத்திரம் செய்திருந்த நிலையில் 15 கோடி ரூபாய் நிலம் மற்றும் வீட்டை முறைக்கேடு செய்தவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்காவிட்டால் எங்கள் குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தற்கொலை செய்துக்கொள்ள இருப்பதாக வேதனையுடன் கூறினார்.