தங்க நகையை களவாடிய சிறுவன் மற்றும் இளைஞன் கைது !
காவல் நிலையம்
3 கிராம் தங்க நகையை களவாடிய சிறுவன் மற்றும் இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி நித்யா வயது 35. இவர் பிப்ரவரி 25 ஆம் தேதி காலை 9 மணி அளவில், வீட்டை பூட்டி விட்டு, சொந்த வேலையாக வெளியே சென்றவர் மீண்டும் வேலை முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்துள்ளது.மேலும், அது குறித்து சோதனை செய்தபோது, யாரோ சாவியை போட்டு வீட்டை திறந்து உள்ளதும் தெரிய வந்தது. மேலும், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டில் வைத்திருந்த 3 கிராம் தங்க நகையை காணவில்லை.இதனால் நித்தியா மாயனூர் காவல் நிலையத்தில் வீட்டிலிருந்து நகை காணவில்லை என புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் வீட்டில் உள்ளவர்களிடமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நித்யாவின் சகோதரி மகன் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் 17 வயது சிறுவன் மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மஞ்சள் மேடு பகுதியைச் சேர்ந்த பூவலிங்கம் மகன் மணிகண்டன் வயது 20 ஆகிய இருவரும் சேர்ந்து தங்க நகையை களவாடியது தெரியவந்தது. களவாடப்பட்ட தங்கநகையின் மதிப்பு 5,625-ரூபாய் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story