விராலிமலை அருகே கடையில் திருடிய சிறுவன் கைது

X
காவல் நிலையம்
விராலிமலை அருகே கடையில் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கோட்டைத்தெருவைச்சேர்ந்தவர் பெரியசாமி(50). இவர் இலுப்பூர் கோட்டைத்தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சம்பவத்தன்று இரவு கடையின் ஓட்டை பிரித்து ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து பெரியசாமி இலுப் பூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், பணத்தை திருடியது இலுப்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுவனை இலுப்பூர் போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
Tags
Next Story
