கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி !
சிறுவன் பலி
திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை மகன் 2பேர் மீதும் திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனத்தை சேர்ந்த பேருந்து மோதி விபத்து இதில் இரு சக்கர வாகனத்தின் முன்பக்கத்தில் அமர்ந்து வந்த பிரவீஸ் 6 வயது சிறுவன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை மீது சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி உயிரிழப்பு.
வாகனத்தை ஓட்டி வந்த சிறுவனின் தந்தை சதீஷ்குமார் 29 வலது கை துண்டானது, சம்பவம் குறித்து தகவல் அறிந்து திரண்ட ஊர் பொதுமக்கள் கல்லூரி வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ரோட்டில் காலை 8 மணி முதல் ஒன்பதரை மணி வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி வாகனங்கள் தாறுமாறான வேகத்தில் செல்வதால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது எனவும் வேகத்தடை அமைக்க வேண்டும் பேரிகாடுகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என ஆவேசமடைந்த பொதுமக்கள் இழுத்து ரோட்டில் போட்டு பேருந்துகளை தடை செய்து பேருந்து ஓட்டுநரை தங்களிடம் ஒப்படைக்கும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ராசிபுரத்தில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையை கடக்க முயன்ற போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை உடைத்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீஸ் டிஎஸ்பி இமயவரம்பன் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தார் ஆனாலும் பொதுமக்கள் சமாதானம் அடையாமல் பேருந்துகளை இன்னும் சிறை பிடித்துள்ளனர் சுமார் 2 மணி நேரமாக திருச்செங்கோடு ஈரோடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் இறந்த பிரவீஸ்தந்தை சதீஷ்குமார் கூட்டப்பள்ளி அம்மைப் பய நகரில் வசித்து வருகிறார் தோக்கவாடியில் உள்ள அட்டை கம்பெனியில் ஆட்டோ ஓட்டுநராகவேலை பார்த்து வருகிறார்.பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேகத்தடை அமைத்து தரப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்பட்டது.