மாடக்குளம் கண்மாயில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
மாடக்குளம் கண்மாயில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
விடுமுறை நாளில் நண்பர்களுடன் கண்மாயில் குளிக்க சென்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
மதுரையில் சமீப காலமாக பெய்த தொடர் மழை காரணமாக ஏரிகள், குளங்கள் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இதற்கிடையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தொடங்கியதால் சிறுவர்களும் மாணவர்களும் அருகில் உள்ள குளங்களுக்கும், ஏரிகளுக்கும் குளிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி மதுரை மாடக்குளம் கண்மாயில் மாடக்குளம் மெயின் ரோடு, பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கருப்பு உள்ளிட்டட மூன்று சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது கார்த்திக் கருப்பு என்ற சிறுவன் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்துள்ளான். இறந்த நிகழ்வு குறித்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் கதறி அழுத காட்சி அப்பகுதியை சேர்ந்தவர்களை அதீத சோகத்தில் ஆழ்த்தியது. மங்கையர்க்கரசி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டு அரையாண்டு விடுமுறையின் தொடக்க நாளிலேயே ஒரு சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. பள்ளி மாணவர்கள் அனைவரும் அரையாண்டு விடுமுறையில் இருப்பதால் நிரம்பியுள்ள ஏரி, குளங்களில் தகுந்த பாதுகாப்பு போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
Tags
Next Story