மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
சங்கரன்கோவில் அருகே சுப்பலாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
தென்காசி மாவட்டம், சுப்பலாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விசைத்தறி கூலித் தொழிலாளி வேல்முருகன் இவரது மகன் அபிலேஷ் (13) அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான் நேற்று இரவு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் இரும்பு கம்பி ஒன்று இருந்ததாகவும் அந்த கம்பியை சிறுவன் அபிலேஷ் பிடித்துள்ளான் அந்த இரும்பு கம்பியில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது அப்போது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதில் அச்சிறுவன் துடிதுடித்த சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார் இதனை அறிந்த உறவினர்கள் சிறுவனை கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர் அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் அபிலேஷ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவத்தை அறிந்த தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் இச்சம்பவம் குறித்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story