தனியார் மருத்துவமனையில் சிறுவன் சாவு: lஉறவினர்கள் போராட்டம்

தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற 5 வயது சிறுவன் சாவு தவறான சிகிச்சை அளித்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஜெய்பீம் நகர் பகுதியை சேர்ந்த பிர பாகரன் என்பவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் மகன் தஸ்வந்த் (வயது 5). இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு தஸ்வந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் தண்டராம்பட்டு மின்சார அலுவலகம் எதிரே உள்ள தனியார் மருத்துவம் னையில் சிறுவனுக்குசிகிச்சை பெற சென்றனர் அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போது சிறுவனுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோ தித்த டாக்டர்கள் திருவண் ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அதிகாலை சிறு வன் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து சிறுவனின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் நேற்று காலை உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று குழந்தைக்கு என்ன சிகிச்சை அளித்தீர்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அப் போது மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்கேட்க வந்த உறவினரை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தையின் உறவினர்கள் தவறான சிகிச்சை யால் சிறுவன் இறந்ததாக கூறி தண்டராம்பட்டில் இருந்து தானிப்பாடி செல்லும் சாலை யில் தனியார் மருத்துவமனை எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் சிறுவன் இறந்தான் என கூறினர்.

அதற்கு போலீசார் முறையாக புகார் கொடுத்தால், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதைத் தொடர்ந்து அவர் கள் சாலை கைவிட்டனர். மறியலைஇதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story