சிறுவனுக்கு மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு
பைல் படம்
பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 8 வயது சிறுவன் உயிரிழிந்தான்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி கணபதிபாளையத்தைச் சேர்ந்த நேசலிங்கம் என்பவர் தனது குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முடித்து விட்டு படிப்பாதை வழியாக அடிவாரம் வந்தபோது நேச லிங்கத்தின் 8 வயது மகன் விஸ்வாவுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே சிறுவன் உயிரிழந்து விட்டான். கடுமையான வெயில் காரணமாக மயக்கமடைந்து உயிரிழந்திருக்கலாம் என பழனி அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story