மாடு முட்டியதில் சிறுவன் பலத்த காயம்

திண்டுக்கல் மேற்கு அசோக் நகர் பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தான்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு மேற்கு அசோக் நகர் பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை அவ்வழியாக சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதையும் மீறி சுற்றி தெரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story