போயர் பேரவை ஆலோசனை கூட்டம்

போயர் பேரவை ஆலோசனை கூட்டம்
X

ஆலோசனை கூட்டம் 

தமிழ்நாடு போயர் பேரவையின் சேலம் கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு போயர் பேரவை சேலம் கிழக்கு மாவட்ட, நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் தாசநாயக்கன்பட்டியில் நடந்தது. மாநில தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். இளைஞர் அணி செயலாளர் ராமச்சந்திரன், துணை பொருளாளர் சந்திரன், பன்னீர்செல்வம் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ராஜா, பொது செயலாளர் பெரியப்பொண்ணு, துணை பொதுச்செயலாளர் பொன்னையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை ஆலோசகர் கந்தசாமி, துணை ஆலோசகர் ரங்கநாதன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சூர்யா ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்பட தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட போயர் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி.க்களாக யாரும் இருந்ததில்லை. எனவே போயர் சமுதாயத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்கும் கட்சிக்கு, நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story