நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்!

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்!

போராட்டம் 

கோத்தகிரியில் தனியார் செல்போன் நிறுவன கோபுரம் அமைக்கும் பணியை தடுக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கேர்பெட்டா பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, கேர்பெட்டா பகுதியில் தனியார் செல்போன் நிறுவனத்தின் கோபுரம் அமைக்கும் பணி கடந்த 2018ம் ஆண்டு பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாகவும், முன்னாள் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையாலும் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2023ம் ஆண்டு இந்த கோபுரம் அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. கேர்பெட்டா கிராமத்தின் நடுவே இந்த கோபுரம் அமைக்கப்படுவதால் முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் என கூறி கேர்பெட்டா கிராம மக்கள் சார்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தும், பல்வேறு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கேர்பெட்டா கிராம மக்கள் கூறுகையில், " எங்கள் ஊரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். பள்ளி குழந்தைகள்,வயது முதிர்ந்தோர்,நோய் பாதிப்பு ஏற்ப்பட்டு அதிக அளவில் உள்ளனர். ஊரின் நடு பகுதியில் இந்த செல்போன் கோபுரம் அமைப்பதால் ஊரில் வசித்து வரும் கிராம மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது‌.எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்னையில் தலையிட்டு உடனே ஊரின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மாபெரும் போராட்டம் நடத்துவதோடு மட்டுமல்லாமல் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிபப்போம்," என்றார்.

Tags

Next Story