காதலியை துன்புறுத்திய காதலன் கைது
காதலை நிறுத்தியதால், காதலியை துன்புறுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர்.
காதலை நிறுத்தியதால், காதலியை துன்புறுத்திய காதலன் கைது.காவல்துறை நடவடிக்கை. கரூர் மாவட்டம், ஏமூர் அருகே உள்ள ஏமூர் புதூரை சேர்ந்தவர் பாலமுருகன் மகள் புவனேஸ்வரி வயது 23. அருகில் உள்ள ஏமூர் நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் சண்முகம் வயது 24. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே புவனேஸ்வரி தனது காதலை நிறுத்திக் கொண்டார். இதனால் சண்முகம் கோபமடைந்தார். மேலும், ஏப்ரல் 29ஆம் தேதி காலை 8:30- மணி அளவில், ஏமூர் புதூர் பகுதியில் செயல்படும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டு இருந்தார் புவனேஸ்வரி. அப்போது அங்கு வந்த சண்முகம், புவனேஸ்வரிடம் தன்னிச்சையாக சென்று சத்தமிட்டுள்ளார். மேலும், புவனேஸ்வரியை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கி மிரட்டல் விடுத்ததோடு, புவனேஸ்வரியை துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் புவனேஸ்வரிக்கு வலது கையில் காயம் ஏற்பட்டதால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காதலிக்க மறுத்ததால், தன்னிச்சையாக சென்று தகராறு செய்த சண்முகத்தை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story