சிறுவன் மர்ம மரணம் - பிரேத பரிசோதனை அறிக்கைக்கு காத்திருக்கும் போலீஸ்
தூக்கில் தொங்கிய நிலையில் சிறுவன்
குமரி மாவட்ட எல்லை, வெள்ளறடை பஞ்., பகுதிக்கு உட்பட்ட கோவிலூர் அருகே அம் பலம் பகுதியை சேர்ந்த அருளானந்த குமார் ஷைனி தம்பதிதியினரின் மகன் அபிலாஷ் குமார் எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் நேற்று வீட்டில் அறையில் தொங்கிய தொங்கிய நிலையில் காணப்பட்டார்.அறை ஜன்னலில் தூக்கில் தொங்கிய சிறுவனின் இரு கைகளும் பின்னால் கட்டிய நிலையில் காணப்பட்டது. அபிலாஷ், தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுவனின் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது கூடுதல் சந்தேகங்களை உருவாக்கியது.வெள்ளறடை போலீ சார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். நேற்று காலை பிரேத பரிசோதனை செய்து, மாலையில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும், போலீஸ் நாயும் பரிசோதனை நடத்திய பின்னரும் சந்தேகிக்கும் படியான எந்த தடயங்களும் சிக்கவில்லை. இதனால் பிரேத பரிசோதனை முடிவு வந்த பின் கூடுதல் விசாரனை மேற்கொள்வது என போலீசார் முடிவு செய்துள்ளனர்.