காமாட்சி அம்மன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா

காமாட்சி அம்மன் கோவில்களில் பிரம்மோற்சவ விழா

பிரம்மோற்சவ விழா

"காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
"காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி லட்சுமி சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் அலங்கார மண்டபத்தில், இருந்து கொடிக்கம்பம் அருகில் உள்ள மண்டபத்திற்கு எழுந்தருளினார். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை, மாலையில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 18-ந் தேதி தங்க ஹம்ச வாகனம், 20-ந் தேதி தங்க கிளி வாகனம், 21-ந்தேதி ரதம் உற்சவம், 23-ந்தேதி வெள்ளி ரத உற்சவம், 26-ந்தேதி காலை விஸ்வரூப தரிசனமும் நடைபெறுகிறது. அன்று இரவு விடையாற்றி உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது."

Tags

Next Story