திருவள்ளியாங்குடி ராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

திருவள்ளியாங்குடி ராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

மரகதவல்லி நாயிகா சமேத கோலவில்லி ராமர் 

திருவள்ளியாங்குடி ராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருவெள்ளியங்குடி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மரகதவல்லி நாயிகா சமேத கோலவில்லி ராமர் கோயில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடற்பெற்ற 108 திவ்ய தேசங்களில் 22 வது திருத்தலமாகும். திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது.

வாமனாவதராதத்துடன் தொடர்புடைய இத்திருத்தலம் நான்கு யுகங்களிலும் வழிபடப்பட்ட திருத்தலம். பிரம்மாண்டபுராணமும், விஷ்ணு புராணமும் குறித்து இத்தலம் மூலம் அறியலாம். இத்தகையை சிறப்பு மிக்க கோவிலில் ப்ரமோத்ஸவ விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு முன்பாக சிறப்பு அலங்காரத்தில் கோலவில்லி ராமசுவாமி அம்பாளுடன் எழுந்திருளிய நிலையில், கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றம் வெகு சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். மேலும் மாலையில் சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது .

தொடர்ந்து இன்று காலை பல்லக்கில் பெருமாள் புறப்பாடு திருமஞ்சனமும், மாலை சூரிய ப்ரபை புறப்பாடும் நடைபெறுகிறது. இதை போல வரும் 8ம் தேதி முதல் காலையில் திருமஞ்சனமும், மாலைகளில் புன்னை மர வாகனம், கருட வாகனம், யானை, குதிரை வாகனத்தில் புறப்பாடும், 7ம் தேதி மாலை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 9ம் தேதி காலை தேர் சப்பரம், தீர்த்தவாரி நடைபெறுகிறது. பிறகு 11ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story