விழுப்புரம் அருகே லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பிரமோற்சவம்

விழுப்புரம் அருகே லக்ஷ்மி நரசிம்மர் கோவில் பிரமோற்சவம்

லட்சுமி நரசிம்மர்

பூவரசன் குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 18ம் தேதி துவங்குகிறது.

விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பத்தில் உள்ள அமிர்தவல்லி நாயிகா சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் 18 ம் தேதி முதல் 20ம் தேதிவரை நடக்கிறது.அதனையொட்டி வரும் 18ம் தேதி கணபதி ஹோமம் , அங்குரார்பணம் நடக்கிறது. 19ம் தேதி காலை 7.00 மணிக்கு துவஜாரோகணம், மாலை 4.00 மணிக்கு பேரீதாடனம், 6.00 மணிக்கு சுவாமி சிம்ம வாகனம் புறப்பாடும், 20ம் தேதி ஹம்ச வாகனம், சூர்யபிரபை, 21ம் தேதி கருட சேவை, அனுமந்த வாகனம் புறப்பாடு நடக்கிறது.

22ம் தேதி சேஷ வாகனம், சந்திரபிரபை, 23ம் தேதி நாச்சியார் திருக்கோலம், யாளி வாகனம், 24ம் தேதி சூர்ணாபிஷேகம், வேணுகோபாலன் அலங்காரம், யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. வரும் 25ம் தேதி காலை 8.00 மணிக்கு நவகலச திருமஞ்சனம், 10.30க்கு திருக்கல்யாண உற்சவம், கற்பக விருட்சம் வாகன புறப்பாடும், 26ம் தேதி காளிங்க நர்தணம், தொட்டி திருமஞ்சனம், குதிரை வாகனம் புறப்பாடு நடக்கிறது.

மறுநாள் 27ம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டமும், 28ம் தேதி போர்வை களைதல், மட்டை அடி உற்சவம், திருமஞ்சனம் தீர்த்தவாரி, த்வாதச ஆராதனம், புஷ்ப யாகம், பெரிய சாற்றுமுறை, கருட வாகனம், த்வஜஅவரோகணம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை தக்கார் சந்திரன், இணை ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் ராமலிங்கம், ஆலய அர்ச்சகர் பார்த்தசாரதி பட்டர், வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story