விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை உடல் உறுப்புகள் தானம்

பாராட்டு விழா 

திருச்செங்கோடு அருகேயுள்ள கோவிந்தம்பாளையத்தில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஆசிரியை மஞ்சுளாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியை உடலுக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டு தகனம் நடந்தது. மனைவி இறந்த துக்கத்திலும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவரது கணவர் ஈஸ்வரனுக்கு. திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் பக்தர்கள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. கோயில் வளாகத்தில் நடந்த விழாவிற்கு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர் சாந்தி முத்துக்குமார் வரவேற்றார். ஆசிரியை மஞ்சுளாவின் கணவர் ஈஸ்வரனின் சேவையை மாவட்டதிமுக வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு பாராட்டி ஈஸ்வரனுக்கு பொன்னாடை அணிவித்தார் கோவில் தர்மகர்த்தா சாந்தி முத்துக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பக்தர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story