விளாச்சேரியில் விவசாய பாசன கால்வாய் உடைப்பு; எம்எல்ஏ ஆய்வு!

விளாச்சேரியில் விவசாய பாசன கால்வாய் உடைப்பு; எம்எல்ஏ ஆய்வு!

  விளாச்சேரியில் விவசாய பாசன கால்வாய் ஏற்பட்ட உடைப்பு குறித்து எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

விளாச்சேரியில் விவசாய பாசன கால்வாய் ஏற்பட்ட உடைப்பு குறித்து எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

மதுரை விளாச்சேரியில் விவசாய பாசன கால்வாய் உடைப்பு; வடிவேல்கரை ஊருக்குள் 200க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த தண்ணீர் பாதிப்படைந்த பகுதிகளில் ஆய்வு செய்த எம்எல்ஏ மதுரை வடிவேல்கரை கால்வாய் உடைந்ததால் பாதிக்கப்பட்ட இடங்களில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆய்வு.


மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட விளாச்சேரி கிராமத்தின் வழியாக நாகமலை புதுக்கோட்டையில் இருந்து நிலையூர் கன்மாயிக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கம்பிக்குடி பாசன கால்வாயில் வடிவேல் கரை பகுதியில் உள்ள கால்வாய்க்கரை உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வடிவேல்கரை ஊருக்குள் புகுந்துள்ளதால். இந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உடனே தண்ணிய வெளியற்றுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும் என்றும் கால்வாய் உடைப்பை முற்றிலுமாக சரி செய்ய வேண்டும், கால்வாய் உடைப்பு ஏற்படாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 200-க்கும் மேற்பட்ட வடிவேல்கரை கிராம மக்களுக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா நிதியுதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் இங்கு இருக்க நடுத்தர மக்களுக்கு விரைவாக மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுப்பணித்துறை மற்றும் விவசாயத் துறையை சேர்ந்தவர்கள் உரிய கணக்கெடுப்பின்படி பாதுகாப்பு நிதியை வழங்க வேண்டும் என்றார். டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் நிதி வழங்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி குரல் கொடுப்பாரா என்ற கேள்விக்கு: எங்களது பொதுச்செயலாளர் மிகத் தெளிவாக கூறிவிட்டார்.

தமிழகத்திற்கு எந்த தேசிய கட்சியும் ஆண்டாண்டு காலமாக தமிழகத்தை ஓரவஞ்சனையாக பார்த்து இதுவரை கேட்ட நிதியை வழங்கவில்லை. நாங்கள் கூட்டணியாக இருக்கும்போது கோரிக்கை மனு கொடுத்தோம் இன்றைக்கு இருக்க மத்திய அரசு அதை நிறைவேற்ற வில்லை எடப்பாடியார் முடிந்த வரைக்கும் மீனவர்கள் விவசாயிகள் என அனைவருக்கும் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர் முடிந்த அளவுக்கு அதனை மத்திய அரசு மூலம் நிறைவேற்றி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி இடம் இருந்து அதிமுக மீட்பதே எனது கடமை என ஒ.பன்னீர்செல்வம் பேசியது குறித்த கேள்விக்கு அவர் முடிந்து போன வரலாறு எழுதப்பட்டு விட்ட ஓவியம் இனிமேல் அவருக்கு வரலாறும் கிடையாது அதிமுகவுடன் தொடர்பும் கிடையாது எனவே அது மக்கள் மத்தியில் எடுபடாது. அவர் பேசியிருக்க பேச்சு எல்லாம் அரசியல் அநாகரீகமானது ரகசியங்களை வெளிக் கோணறுவேன் என்று பேசுவது சில நாட்கள் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ்க்கே இலுக்கு. முதல்வர் ஒன்றிய அரசு என்று மத்திய அரசு என்றும் மாறி மாறி கூறுகிறார் இது குறித்து உங்கள் கருத்து குறித்த கேள்விக்கு: ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றிய அரசு என்பார் மத்திய அரசு என்பார் இந்தியா என்ற பெயரை தவறாக பயன்படுத்துவார்.

இந்தியாவுக்கே இழுக்க ஏற்படும் வகையில் இந்திய என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கினார்கள் அதுவும் தோல்வியை சந்திக்கும் மத்திய அரசு உடனான கூட்டணி குறித்து கேள்விக்கு பிஜேபியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை பொதுச் செயலாளர்கள் கூறியிருக்கிறார் கூட்டணி பற்றி கட்சி முடிவு எடுக்கும் ஏற்கனவே நாங்கள் பொலிவாக இருக்கிறோம் இன்னும் கூட்டணி சேர்ந்தால் இன்னும் பொலிவாக இருப்போம் சிறுபான்மையர் அதிகளவு வந்துள்ளனர் எங்களுக்கு எதிர்ப்புகள் இல்லை அதிகமான வெற்றி சூழ்நிலை மாண்புமிகு எடப்பாடி யார் அவர்கள் கீழ் வந்துள்ளது திமுகக்கு எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு சென்னையிலிருந்து குமரி வரை எதிர்ப்பு இதனால் எங்களுக்கே வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவித்தார்.

Tags

Next Story