பாசன கால்வாய் உடைப்பு; குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது தண்ணீர்

பாசன கால்வாய் உடைப்பு; குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது தண்ணீர்

மேலூரில் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரால் தேங்கியுள்ளது.  

மேலூரில் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடியிருப்பு பகுதிகளில் தண்ணீரால் தேங்கியுள்ளது.

மேலூரில் பாசன கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு: குடியிருப்பு மற்றும் மின்சார வாரிய அலுவலகத்தை சூழ்ந்துள்ள தண்ணீரால், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் நிகழும் முன் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் மேலூரில், நொண்டிக்கோவில்பட்டியில் இருந்து கொட்டக்குடி பகுதிக்கு 6ஏ என்ற பாசன கால்வாய் செல்கின்றது.

இந்த பாசன கால்வாயில் இருந்து, தெற்குபட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் அருகில் உள்ள மின் பகிர்மான மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை தண்ணீர் குளம் போல சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

அதேபோல் மின்சார வாரிய அலுவலகத்தை சூழ்ந்துள்ள தண்ணீரால், மின்சார வாரிய அலுவலகத்திற்கு வரும் அதிகாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமடைந்து வருவதுடன், இப்பகுதியில் சூழ்ந்துள்ள தண்ணீரால் மின்சார பாதிப்புகள் ஏற்பட்டு விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், குடியிருப்பு வாசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மேலூர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகரிடம் கேட்டப்போது.. உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story