வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு

திருட்டு 

தர்மபுரி எஸ்பி அலுவலகம் அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகை 7 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகம் எதிரே உள்ள கோணம்மாள் தெருவில் வசிப்பவர் சிலம்பரசன், இவர் சில்லி சிக்கன் கடை நடத்திவருகிறார். இவரது மனைவி சுகுணா, இவர்கள் பழனிக்கு சாமிகும்பிட குடும்பத்துடன் சென்றனர். நேற்று காலை 7 மணிக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்துகிடப்பதாக அருகில் வசிப்பவர்கள் சிலமபரசனுக்கு செல் போனில் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கோயிலுக்கு சென்றவர்கள் பாதியிலே வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் பொருட்கள் சிதறியும், அதில் வைத்திருந்த 40 பவுன் நகைகள், சுமார் 7 லட்சம் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து சுகுணா தரம்புரி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அதன் பேரில் போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.தொடர்ந்து கைரேகை நிபுனர்கள் வரவழைக்கப் பட்டு தடயங்களை பதிவு செய்தனர். சிலம்பரசன் அதிகாலை குடும்பத்துடன் வெளியே சென்றது தெரிந்து கொண்ட நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்ற டவுன் போலீசார். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டுள்ளனர்.

Tags

Next Story