வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே கோல்டன் சிட்டி 3வது குறுக்கு தெரு பகுதியில், வசிப்பவர் சீனிவாசன் இவரது மனைவி புவனேஸ்வரி வயது 46. இருவரும் நெய்க்குளம் உறவினர் இறப்பிற்கு டிசம்பர்-16ம் தேதி மாலை பெரம்பலூரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் மீண்டும் பெரம்பலூர் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த, நெக்லஸ் செயின் வளையல் தோடு மோதிரம் என 14 பவுன் நகை மற்றும் 2000 ரூபாய் பணம் என 6லட்சம் மதிப்பிலான நகை திருடுபோய் இருந்தது தெரியவந்தது,
இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் சம்பவ இடத்திற்கு கைவிரல் பரிசோதனை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டு வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.