கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு

கோவிலின் பூட்டை உடைத்து திருட்டு

திருட்டு 

வந்தவாசி அருகே கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த காவேடு கிராமத்தில் ஸ்ரீ வஜன காத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் தங்கத் தாலி மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

மேலும் அதே கிராமத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் கோயிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றனர்.இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story