கண்மாய் தூர்வாரப்படாததால் உடைப்பு - விவசாயிகள் அவதி

கண்மாய் தூர்வாரப்படாததால்  உடைப்பு - விவசாயிகள் அவதி

வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகள் மீட்பு 

வைகை அணையிலிருந்து கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்ட விவசாய தேவைக்காக சுமார் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு 2ஆயிரம் கன அடி தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் கால்வாய் மூலம் சென்று வருகிறது.இந்நிலையில் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கண்மாய்க்கு செல்லும் வைகை பாசன கால்வாயில் அதிகளவு தண்ணீர் சென்றதையடுத்தும், இக்காலவாய் கடந்த பல வருடங்களாக தூர்வாரப்படாமலும், கரைகள் உயர்த்தப்படாமல் இருப்பதினாலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பெரும்பச்சேரி,மேட்டுமடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விளைநிலங்களில் கால்வாயில் சென்ற தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தண்ணீரில் சிக்கிய 20க்கும் மேற்பட்ட ஆடு மாடுககளை தோளில் சுமந்து விவசாயிகள் கரை சேர்த்தனர்

Tags

Next Story