ஆழ்துளை குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

ஆழ்துளை குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

 வீணாகும் குடிநீர்

குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும்போது, தொட்டிக்கு செல்ல வேண்டிய குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது
காஞ்சிபுரம் மாநகராட்சி வெள்ளைகுளம் தெற்கு கரை தெரு கோடியில் ஒரு ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு அப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக மூன்று இடங்களில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இத்தொட்டிக்கும், அருகில் உள்ள மற்ற இரு குடிநீர் தொட்டிக்கும் தண்ணீர் நிரப்ப, ஆழ்துளை குழாயில் இருந்து நிலத்தடி வாயிலாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பும்போது தொட்டிக்கு செல்ல வேண்டிய குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. மேலும் தொட்டி முழுமையாக நிரம்ப நீண்ட நேரமாகிறது. இதனால் குடிநீர் மட்டுமின்றி மின்சாரமும் வீணாகிறது. இதனால், மின்வாரியத்திற்கு கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. நீர்மூழ்கி மின்மோட்டாரும் நீண்ட நேரம் இயங்குவதால் விரைவில் பழுதடையும் சூழல் உள்ளது. எனவே ஆழ்துளை குழாயில் இருந்து குடிநீர் தொட்டிகளுக்கு குடிநீர் செல்லும் மெயின் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story