காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு - வீணாகும் நீர்

ஊத்தங்கரை அருகே கல்லாவியில் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு பல மாதங்களாக சீர் செய்யப்படாததால் பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி பஞ்சாயத்தில் ஊத்தங்கரை செல்லும் சாலையில் இடது புறம் காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சீர் செய்யப்படாமல் காணப்படுகிறது இதனால் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் தேங்கி நாள்பட்டு போனதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி ஏற்படும் இடமாக காணப்படுகிறது .இவற்றினை சீர் செய்ய பலமுறை கல்லாவி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புலம்புகின்றன மேலும் இந்த நீர் வெளியேறி குப்பை கூடங்களால் பாசை நிரம்பி மீண்டும் குழாய்க்குள் தண்ணீரில் கலக்கும் அவலங்களாக காணப்படுகிறது. இதன் வழியாக அருகே உள்ள கிராமங்களுக்கு குடிநீருக்காக செல்லும் இந்த நீர் அசுத்த நீராக மாறி வருகிறது. எனவே உடனடியாக குழாயை சீர் செய்து கிராமப் பகுதிக்கு முறையாக பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story