கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - பல லட்சம் லிட்டர் குடிநீர் வீண்

பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடும் நீர்

மேட்டூரில் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் ஒடி வீணானது.
மேட்டூர் அருகே தொட்டில் பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி , தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர். வீணாக வெளியேறியது. சம்பவ இடத்திற்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story