மேட்டூரில் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு: தண்ணீர் சேதம்
சாலையில் வீணாக ஓடிய தண்ணீர்
மேட்டூர் அருகே தொட்டில் பட்டி காவிரி ஆற்றில் நீரேற்று நிலையம் அமைத்து காடையாம்பட்டி பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 28 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
இதன் மூலம் ஓமலூர், காடையாம்பட்டி , தொப்பூர், தாரமங்கலம், மேச்சேரி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலையம் செல்லும் சாலையில் காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிது.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் வெளியேறியதால் சாலை முழுவதும் வெள்ள காடாய் காட்சி அளித்தது. அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றது. மேலும் சிலர் இலவசமாக வாகனங்களை குடிநீரில் சர்வீஸ் செய்து கொண்டனர். குடிநீர் வடிகால் வாரியர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தினர்.