பிரதான குழாயில் உடைப்பு: செவிலிமேடில் குடிநீர் வீண்
பிரதான குழாயில் உடைப்பு
செவிலிமேடு சாலை தெருவில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிப்போருக்கு, பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் -- வந்தவாசி சாலை, செவிலிமேடு சாலை தெருவில், விறகு கடை அருகில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. இதனால், குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதோடு, நீண்டநேரம் மின் மோட்டார் இயங்குவதால், மின்சாரம் விரயமாவதுடன், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது. எனவே, செவிலிமேடு சாலை தெருவில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story