குடிநீர் குழாய் உடைப்பு; வீணாகும் தண்ணீர்

காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வீணாக ரோட்டில் வழிந்தோடுகிறது; வாகன விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் காங்கயம் வட்டாச்சியர் அலுவலகம் காங்கயம் காவல் நிலையத்தின் பின்புறம் செயல்பட்டு வருகிறது. காங்கயம் ரவுண்டானா பகுதி திருச்சி சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை மற்றும் காங்கயம் பேருந்து நிலையம் பகுதிக்கு மையப்பகுதிமாக உள்ளது. மணிக்கு 1000 முதல் 2000 வண்டிகள் கடந்து செல்லும் அளவிற்கு போக்குவரத்து அதிகமுள்ள பகுதியாக உள்ளது. மேலும் ரவுண்டானாவில் இருந்து கோவை பிரதான சாலையின் அடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல்லாயிர லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் சாலை சேதமடைந்து மிகப்பெரிய பள்ளம் உருவாகி வாகன விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

குழாய் உடைந்து அதனால் சாலை ஏற்பட்ட பள்ளம் வட்டாச்சியர் அலுவலகம் நுழைவாயிலின் முன்பகுதியில் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வழிந்து ஓடுவாதாலும், பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனங்களின் சக்கரம் இறங்கும் போது நிலைத் தடுமாறி சறுக்கி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் தேங்கி நிற்க்கும் பகுதி பேருந்து நிறுத்தம் ஆகும். கோவை செல்லும் பயணிகள் பேருந்திற்காக அந்தப் பகுதியில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது

இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் அந்த நீரை வாரி பயணிகள் மீது இறைக்கின்றது இதனால் பயணிகள் பாதிப்படைகின்றனர். பிரதான முக்கிய சாலையில் இது போல் குளி ஏற்பட்டு கடந்த மூன்று மாதவனாக சரி செய்யப்படாமலும் நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து காங்கயம் ரவுண்டானாவில் இருந்து கோவை சாலையில் அமைந்துள்ள பள்ளத்தையும், குழாய்‌ உடைப்பையும் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என நடவடிக்கைகள் எடுக்குமாறு இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story