கோவில் உண்டியல் உடைப்பு - காவல் நிலையத்தில் புகார்

கோவில் உண்டியல் உடைப்பு - காவல் நிலையத்தில் புகார்
X
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே ஒண்டிப்புலி நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 30ஆம் தேதி இரவு அதே ஊரைச் சார்ந்த பாண்டி என்பவர் உடன் மக்காச்சோள களத்திற்கு காவலுக்கு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஸ்ரீ கருப்பசாமி கோவிலில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்டு முருகேசன் மற்றும் பாண்டிய ஆகிய இருவரும் அதே ஊரைச் சார்ந்த சில நபர்களை அழைத்துக் கொண்டு ஸ்ரீ கருப்பசாமி கோவிலுக்கு சென்று பார்த்த பொழுது கோவிலின் மெயின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாகவும்,அதை அடுத்து முருகேசன் மற்றும் அந்த ஊர்காரர்கள் கோவில் வளாகத்தில் தேடிய போது அங்கு திருட முயற்சித்த மூன்று இளைஞர்கள் கோவிலின் காம்பவுண்ட் சுவரில் இருந்து குதித்து அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கோவிலில் உள்ளே இருந்த உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்ததாகவும் தப்பிச் சென்ற மூவரும் அங்கு இருந்து மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடியதாகவும் இதுகுறித்து முருகேசன் அளித்த புகார் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story