கோவில் உண்டியல் உடைப்பு.
புழல் அடுத்த பெலாவரை ஸ்ரீனிவாசா பெருமாள் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடு போன நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
புழல் அடுத்த பெலாவரை ஸ்ரீனிவாசா பெருமாள் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடு போன நிலையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
புழல் அடுத்த புத்தகரம், சூரப்பட்டு பிரதான சாலை, பெலாவரை பகுதியில், ஸ்ரீனிவாசா பெருமாள் கோவில் உள்ளது. நேற்று காலை 8:00 மணிக்கு, கோவில் பூசாரி கிரிதரன், 50, கோவிலை திறக்க சென்றார். அப்போது, கோவிலின் முன்பக்க கேட்டின் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு, பணம் திருடு போயிருந்தது. இது குறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story