பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகை - பணம் கொள்ளை ....
காவல்துறை
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5-பவுன் தங்க நகை ரூ.20,000- கொள்ளையடித்த மர்ம நபர்களை போலிசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5-பவுன் தங்க நகை ரூ.20,000- கொள்ளை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தோட்டக்குறிச்சி அருகே உள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மனைவி திலகவதி வயது 57. இவர் இவர் மார்ச் 30 ஆம் தேதி மாலை 6 மணி அளவில், தனது வீட்டை பூட்டிவிட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க அருகில் கடைக்கு சென்று விட்டு மீண்டும் இரவு 8 மணி அளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ஐந்து பவுன் தங்க நகை, ரூபாய் 20,000- கொள்ளை போனது கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில பதிவுகள் அங்கு கிடைக்கப்பெற்றதை கைரேகை நிபுணர்கள் உறுதி செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, நகை, பணம் கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story