வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு
X

திருட்டு 

திருவண்ணாமலை புறவழிச்சாலை சர்க்கார் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் . இவர் கத்தார் நாட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி தவுலத் மகன் முஷ்ராப் அலி, இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு மும்பையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலைக்கு நேற்று இரவு திரும்பினார் . அப்போது வீட்டின் பின்பக்க கதவு, பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 18 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது .இது குறித்து திருவண்ணாமலை வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story