திருப்பூரில் மார்பகபுற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

திருப்பூரில் மார்பகபுற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மார்பகபுற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் சங்கத்தின் அங்கமான திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பு மற்றும் பெண் தொழில் முனைவோர் துணைக்குழுவின் முன்னெடுப்பில், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் மற்றும் திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்கத்தினருடன் இணைந்து பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் சஜினா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பான டாக்டர் அருணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பெண்கள் துணைக் குழுவின் தலைவர் சுமிதா ரவி ரோஷன், துணைத் தலைவர் சுதா சிவசுப்ரமணியம் மற்றும் உறுப்பினர்கள் ஸ்ருதிகா, சுகந்தி கதிரவன், திருமுருகன்பூண்டி ரோட்டரி சங்க தலைவர் முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர்மகேஷ் பாபு வரவேற்று பேசினார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் ராம் திட்டத்தைப் பற்றி விளக்கிப் பேசினார். திருப்பூர் தொழில்வளம் பங்களிப்போர் அமைப்பின் தலைவர் இளங்கோவன், ரோட்டரி அமைப்பின் மருத்துவரான அனிதா விஜய் மேலும் பலர் பேசினர். நிறுவனத்தின் பங்குதாரர்கள் கதிரவன் மற்றும் ரமேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள்.

Tags

Next Story