ராசிபுரத்தில் மார்பக புற்றுநோய் சிறப்பு முகாம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ர குல மகளிர் சங்கம் மற்றும் செயின்ட் பீட்டர் மெடிக்கல் காலேஜ் அண்ட் ரிசர்ச் சென்டர் இணைந்து நடத்திய வருமுன் காப்போம் திட்டத்தின் அடிப்படையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் ராசிபுரம் சரவணா மஹால் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது, இதில் சுமார் 80க்கும் மேற்பட்ட பெண்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
இம் முகாமிற்கு ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ர குல மகளிர் சங்க தலைவர் திருமதி ராஜேஸ்வரி சிவக்குமார் (லட்சுமி ராம் டெக்ஸ்டைல்ஸ்) அவர்கள் தலைமையில் செயலாளர் சுமதி ஜெயபிரகாஷ் (ஶ்ரீ வெங்கடேஸ்வரா ஜுவல்லரி) பொருளாளர் பத்மப்ரியா ரமேஷ், துணைத் தலைவர்கள் கவிதா சந்தானம், சாரதி சௌந்தரராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் இம்முகாமில் துணைச் செயலாளர்கள் சுகன்யா பாபு, சங்கீதா ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகக் குழுவினர் மகேஸ்வரி செந்தில்குமார், சுகன்யா நந்தகுமார், கமலா சிவக்குமார்,சரிதா சிவராமன், வித்யா பாஸ்கர், ,உமா மகேஸ்வரி ஸ்ரீதர், கவிதா பார்த்திபன் ஆகியோர் சிறப்பாக இம்மு முகாமை ஏற்பாடு செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ர குல சமூக சபா அறக்கட்டளை தலைவர் சி.கே. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் இதேபோல் ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ர குல மகளிர் சங்க நிர்வாகிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.