பட்டா மாறுதலுக்கு லஞ்சம் - விஏஓ கைது
கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் செல்வி
. நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்தவர் கணேசன்(74). இவர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான காலிமனையை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலர் செல்வியை (40) அணுகியுள்ளார். அதற்கு செல்வி ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கணேசன் நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார்.
லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் வழிகாட்டுதலின்படி ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை நேற்று மதியம் செல்வியிடம் கணேசன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீஸார் கையும்,களவுமாக செல்வியை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.